பிறந்தநாளில் மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிம்ரன்... வைரலாகும் உணர்வுபூர்வ பதிவு!
49 வயதிலும் குறையாத இளமையாலும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை சிம்ரன், தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு, மகனின் புகைப்படத்துடன் தற்போது வெளியிட்டுள்ள உணர்வுபூர்வமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சிம்ரன்
தமிழ் சினிமாவில் VIP திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சிம்ரன். அதனைத் தொடர்ந்து நேருக்கு நேர், வாலி உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தையும் அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

விஜய், அஜித், கமல் ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
கதாநாயகி, குணச்சித்திர நடிகை, வில்லி என பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்ட சிம்ரன், குடும்ப வாழ்க்கையுடன் இணைந்து திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சிம்ரனுக்கு அதீப் பக்கா மற்றும் ஆதித் பக்கா என இரு மகன்கள் இருக்கின்றார்கள்.
திருமணத்திற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் அவர், தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், தனது மகன் அதீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தப் பதிவில், “என் கைகளை இறுக்கமாகப் பற்றியிருந்த அந்தச் சின்னஞ்சிறு கைகளிலிருந்து, இன்று உலகையே எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் ஒரு இளைஞனாக நீ வளர்ந்திருக்கிறாய். அந்த அன்பான குழந்தையிலிருந்து இன்று நீ இருக்கும் இந்த அற்புதமான மனிதனாக வளர்ந்ததைப் பார்ப்பது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அதீப். நாங்கள் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மகனின் புகைப்படத்துடன் பகிரப்பட்ட இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |