நான் அழுதுவிடுவேன்.... அப்பாவை விட ரொம்ப எமோஷலானவன்... மனம் திறந்த சிம்பு!
அப்பாவை விட ரொம்ப எமோஷலான கரெக்டர். உடனே அழுதுவிடுவன் என்று நடிகர் சிம்பு மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார்.
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், பன்முக திறமை கொண்டவராகவும் வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். இவர் நடிப்பு மட்டுமல்லாது பாடுவது, பாடல் வரிகள் எழுதுவது, இயக்குவது போன்ற பல திறமைகளை கற்ற சகலகலா வல்லவர்.
இடைப்பட்ட காலத்தில் சிம்புவின் படங்கள் சரியாக ஓடாமல் இருந்தது. இதனையடுத்து, 'மாநாடு' படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார். இதன் பிறகு, நடிகர் சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’ படம் வெளியானது. இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. வசூல் சாதனையும் படைத்துள்ளது.
அப்பா விட ரொம்ப எமோஷலானவன்
இந்நிலையில், ஒரு சேனலுக்கு நடிகர் சிம்பு பேட்டி கொடுத்தார். அப்போது, அவர் பேசுகையில், நான் அப்பாவை வோட ரொம்ப எமோஷனலான கரெக்டர். நான் படம் பார்க்கும்போது பயங்கரமா அழுதுவிடுவேன். ஒரு சின்ன சென்டிமென்ட் சீன் வந்தாலுமே அழ ஆரம்பித்துவிடுவேன். ரொம்ப நாள் கழித்து நண்பர்கள் மீட் பண்றாங்க. அவங்க ஊரை விட்டு போறாங்க என்றால் உடனே அழுதுவிடுவேன்.
நான் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்தெல்லாம் யோசிக்க மாட்டேன்.
அழுதுதானே எல்லாரும் பிறக்கிறோம். 10 பேர் சொல்வாங்க.. அவர்கள் சொல்வதற்காக எல்லாம் அழாமல் இருக்க முடியாது. சும்மா அழுதுகொண்டிருந்தால் பார்க்கிற மக்கள் ஒரு மாதிரியா பேசிவிடுவாங்க.... அப்படின்னா நாம அழ கூடாது. அந்த மாதிரியான சூழ்நிலையில் நான் என்னை கண்ட்ரோல் செய்து கொள்வேன் என்று மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார்.