சினிமாவிற்கு வர்றதுக்கு முன்பு சிம்ரன் என்ன வேலை பார்த்தாங்கன்னு தெரியுமா? வெளியான தகவல்!
நடிகை சிம்ரன்
1980 மற்றும் 90களில் பிரபல உச்ச நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் இருப்பது போல நடிகை சிம்ரனுக்கு அதிகப்படியான ரசிகர் பட்டாளம் இருந்தது. தமிழில் சூர்யா, விஜய் நடிப்பில் வெளியான ‘நேருக்கு நேர்’ படத்தில் அறிமுகமாக நாயகியாக அறிமுகமானார் நடிகை சிம்பரம்.
இதனையடுத்து, ரஜினி, கமல், அஜித், பிரசாந்த், அர்ஜுன், சரத்குமார் உட்பட பல நட்சத்திர நடிகர்களுடன் நடித்துள்ளார். இவருடைய நடன அசைவுகளாலும், தன்னுடைய நடிப்பாலும் மக்கள் இதயத்தில் நீங்கா இடம்பிடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
நடிகை சிம்ரன் பார்த்த வேலை
தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
சினிமாவிற்கு வருவதற்கு முன் சின்னத்திரையில் சாதாரண வேலையை நடிகை சிம்ரன் செய்து வந்தாராம். இந்தியில் உள்ள தூர்தர்ஷன் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றினார் சிம்ரன். அப்போதே அவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.
இதன் பின்பு, அவருக்கு பாலிவுட் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில்தான் நடித்து வந்த சிம்ரன், பின்னர் தமிழ் சினிமா நடித்தார். தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துப்போக, தமிழில் நன்கு கவனம் செலுத்தி தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து செட்டிலாகி விட்டார்.