எப்போதும் தாமதமா போரவரா நீங்க? நேரத்தை முகாமை செய்ய சில எளிய வழிகள்!
பொதுவாகவே நேர முகாமைத்துவம் என்பது சிறந்த ஆளுமை கொண்ட மனிதனான நம்மை மாற்றும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு நேரத்தை முகாமை செய்துக்கொள்வது மிகவும் சவாலான விடயமாக காண்பபடுகின்றது.
அலுவலகத்திற்கு செல்லும் போது அவ்லது ஏதாவது முக்கிய கூட்டத்துக்கு தாமதமாக செல்வது, நியாயமான காரணங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நம்மை மற்றவர்கள் மத்தியில் ஒழுங்கற்றவராகவே காட்டும்.
இந்த பழக்கம் நமக்காக பல அற்புதமான வாய்ப்புகளையும் கூட நமக்கு கிடைக்கவிடாமல் செய்துவிடும்.உங்களுக்கும் நேர மேலாண்மையை பின்பற்றுவதில் பிரச்சனைகள் இருக்கிறது என்றால் எவ்வாறு இந்த பழக்கத்தை எளிமையான சில பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் மாற்றிக்கொள்ளலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடைக்காலங்களில் உடம்பை அசிங்கப்படுத்தும் வேர்க்குருவை அடியோடு விரட்டும் பவுடர்- யாரெல்லாம் போடலாம்?
எவ்வாறு நேரத்தை சரியாக முகாமை செய்வது?
முதலில் எந்த வேலைக்கு செல்வதாக இருந்தாலும் குறைந்தது 20 நிமிடங்களுக்கு முன்னர் இந்த இடத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருங்கள்.
மேலும் சாலையில் ஏற்படும் ட்ராஃபிக், வாகனத்தை பார்க்கிங் செய்வது, நடந்து சென்று குறிப்பிட்ட இடத்தை அடைவது என எல்லா விடயங்களுக்கு எவ்வளவு நேரம் செல்லும் என முன்பே யோசித்து வைத்து அதற்கு ஏற்றால் போல் தயாராக வேண்டும்.
நீங்கள் அடிக்கடி தாமதமாக செய்வதாக நீங்களே உணர்கின்றீ்ர்கள் என்றால், காலையில் செய்ய வேண்டிய வேலைகளுள் பாதி வேலையை இரவே செய்து வைக்க முயற்சியுங்கள்.
இது நிச்சயம் பலன் கொடுக்கும். உதாரணத்துக்கு காலையில் அணியும் ஆடையை இரைவே தயார் செய்து வைக்கலாம்.
சுமார் அரை மணி நேரம் அல்லது அதற்கு முன்பாகவே எல்லா வேலைகளையும் முடித்து ஆறுதலாக வெளியில் செல்லது மனதை அமைதியாக வைத்திருக்கும் எனவே கடைசி நேரத்தில் டென்சன் இருக்காது.அதனை பழக்கப்படுத்திக்கொள்வதும் நேர முகாமைத்துகதை சரியாக முறையில் கடைப்பிடிக்க உங்களுக்கு துணைப்புரியும்.
வீட்டில் இருக்கும் கடிகாரத்தில் உண்மையான நேரத்தை விட 5 அல்லது 10 நிமிடங்கள் கூடுதலாக வைத்திருக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதும் உங்களை நேர முகாமையில் சிறந்த நபராக மாற்றிக்கொள்ள உதவும்.
சிலர் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாக செல்வதை விரும்பாமைக்கு காரணம் நேரத்துடன் சென்றால், அந்த நேரத்தை கடத்துவதற்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் தான். இதற்கு தீர்வாக நல்ல புத்தகங்களை எடுத்துச்செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
இது உங்கள் நேரத்தை சுவாரஸ்யமாக கழிக்க துணைப்புரிவதுடன் மற்றவர்கள் மத்தியில் உங்கள் மரியாதையையும் உயர்த்தும். இந்த பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் இலகுவில் நேர முகமைத்துத்தில் சிறந்த நபரைாக மாற உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |