கோடைக்காலங்களில் உடம்பை அசிங்கப்படுத்தும் வேர்க்குருவை அடியோடு விரட்டும் பவுடர்- யாரெல்லாம் போடலாம்?
பொதுவாக கோடைக்காலங்களில் அடிக்கும் வெயிலினால் தோலில் ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று தான் வேர்க்குரு.
வேர்க்குருவுடன் சேர்த்து உடம்பில் பருக்கள், அரிப்பு போன்று பல பிரச்சினைகள் வரும். இது பெரியவர்களை விட சிறுவர்களுக்கு அதிகமாக வரும்.
வேர்க்குருவை கட்டுபடுத்துவதற்காக சிலர் அந்த இடங்களில் பவுடர்கள் பயன்படுத்துவார்கள்.
இது அந்த இடத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை குறைக்கும்.
அந்த வகையில் வேர்குருவை கட்டுபடுத்தும் பவுடர் எப்படி இருக்க வேண்டும்? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
வேர்க்குரு வர காரணம்
நம்முடைய உடலில் வியர்வை அதிகமாகும் பொழுது வியர்வை சுரப்பிகள் மூலம் அது வெளியேற முயற்சிக்கும். இந்த வியர்வை நம்முடைய தோலின் மேற்பரப்பில் படிந்து உடல் சூட்டினால் நீராவியாகிறது. சில சமயங்களில் உடல் சூடு அதிகமாக இருக்கும்.அப்போது சுரப்பிகளுக்கு வேலை அதிகமாகும்.
அந்த வேளையில், வியர்வையும் இறந்த செல்களும் தோலில் படிந்து சின்ன சின்ன மொட்டுகளாக மாறுகிறது. இதுவே வேர்க்குருவாக பார்க்கப்படுகின்றது.
பவுடர் தெரிவு
பொதுவாக வேர்க்குரு இருக்கும் இடங்களில் பவுடர் போடுவதால் அந்த இடம் குளிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் வேர்குரு அதிகமாக இருக்கும் இடங்களுக்கு போடக் கூடாது. இது வேர்க்குரு உள்ள இடத்தில் வேர்க்குருவை அதிகப்படுத்தும்.
வேர்க்குருவை தடுப்பது எப்படி?
- கோடைக்காலத்தில் காட்டன் துணிகளை அணிய வேண்டும்.
- உடலுக்கு மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியாமல் கொஞ்சம் தளர்வாக அணிய வேண்டும்.
- அடிக்கடி வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும்.
- வீட்டில் இருப்பவராக இருந்தால் 2அல்லது 3 முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
-
வியர்வையுடன் இருப்பதை தவிர்த்தால் வேர்க்குருவிடம் இருந்து தப்பிக்கலாம்.