நாள் முழுக்க மவுஸ் பிடித்து கைகள் செத்து போய் விட்டதா? அதற்கான சூப்பர் டிப்ஸ் இதோ!
இன்றைய கலியுகத்தில் நம்மில் சிலர் கணனி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்வார்கள். இதனால் இவர்களுக்கு உடம்பில் பல பிரச்சினைகள் காலப்போக்கில் ஏற்படலாம்.
அந்தவகையில் அதிக நேரம் மவுஸை பயன்படுத்தி வேலைச் செய்வதால் கை மணிகட்டில் வலி அத்துடன் வீக்கம் ஏற்படலாம்.
இதனால் நீண்ட நேரம் அடுத்த நாள் வேலைச் செய்ய முடியாமல் அவதிப்படுவோம். இந்த பிரச்சினைகளை சில பயிற்சிகள் மூலம் சரிப்படுத்தலாம் என்றால் நம்ப முடிகின்றதா?
ஆம், கைகளுக்கு சில பயிற்சிகள் கொடுப்பதினால் நமக்கு மணிக்கட்டு வலி பிரச்சினை காலங்காலத்திற்கு வராது.
அந்த வகையில் அந்த பயிற்சி பற்றி தொடர்ந்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

முட்டுக்கான பயிற்சிகள்
1. இரண்டு கைகளையும் நெஞ்சிற்கு நேராக நீட்டிக் கொள்ளவும். பின்னர் உள்ளங்கைகளில் விரல்களை மடக்கி சுமார் 10 நிமிடங்கள் வரை மூடி மூடி திறக்க வேண்டும்.
2. மூச்சு உள்ளெடுத்து வெளியில் விடும் போது கைகளை மூடி மூடி திறக்கவும். கைகளில் இருக்கும் விரல்களை நன்றாக விரித்து மடக்கி மூடவும்.
3. கைகளை நன்றாக மூடிக் கொண்டு கடிகாரம் முட்கள் சுழல்வது போல் நன்றாக சுழற்றிக் கொள்ள வேண்டும் சுமாராக 10 விநாடிகள் இதனை செய்ய வேண்டும்.

4. மேலும் கீழுமாக கைகளை நன்றாக சுழற்றிக் கொள்ள வேண்டும். இது கைகளில் ஏதாவது முடிச்சிகள் இருந்தால் அதனை எடுத்து விடும்.
5. முதுகை நன்றாக தளர்வாக விட்டு தரையில் வசதியாக அமர்ந்து கொண்டு, கை குலுக்குவது போல் நன்றாக கைகளை குலுக்க வேண்டும்.
6.“தண்ணீரில் மீன் வளைந்து செல்வது” போல் கைகளை இடமிருந்து வலம், வலமிருந்து இடப்பக்கம் சுழற்ற வேண்டும்.
7.கடைசியாக பூனையை போல் கால்களை மடக்கி அமர்ந்து கொள்ளவும். அது உங்கள் முழு உடலை தாங்கும் வகையில் இருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு
இதனை தொடர்ந்து வலி ஏற்படும் போதெல்லாம் செய்ய வேண்டும். இதனால் வலியால் ஏற்படும் வலி குறையும்...