கணினியினால் கண் பாதிப்படைகின்றதா?
நம் உடலில் ஒவ்வொரு உறுப்புக்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொன்றும் அதன் சேவையை சிறப்பாக செய்யாவிட்டால் நம்மால் இயங்க முடியாது.
இதில் கண்கள் ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே. அது நமக்கு ஒளி விளக்கைப் போன்றது.
அவ்வாறான கண்களை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
தற்சமயம் அனைவருமே வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். வேலைக்குச் செல்லும் பெரும்பாலானோர் கணனியிலேயே தொழில் செய்கின்றனர்.
தொடர்ந்து கணனியில் வேலை செய்வதால் காலப்போக்கில் கண்கள் தன் பார்வைத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கவும், எளிதில் கண்கள் சோர்வடையவும் நேரலாம்.
இவ்வாறு கணினியில் தொழில்புரிபவர்கள் தங்கள் கண்களை பாதுகாத்துக்கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.
- புளி சேர்க்காமல் பொன்னாங்கண்ணி கீரையை சமைத்து தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட வேண்டும்.
- இரவு உணவு உண்ட பின்னர் இரு கண்களிலும் தலா மூன்று துளி சுத்தமான நீரை விட்டு இமைகளைக் கொண்டு இலேசாக தேய்க்கலாம்.
- பொன்னாங்கண்ணித் தைலம், திரிபலா தைலம், சந்தனாதி தைலம் என்பவற்றில் ஒன்றை எடுத்து வாரத்துக்கு ஒரு தடவை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
- பப்பாளி, மீன், முட்டை, கேரட் என்பவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- கீரை வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- தினமும் குறைந்தது 2 லிட்டர் நீர் அருந்த வேண்டும்.
- இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு 11 மணிக்குள் நித்திரைக்குச் செல்ல வேண்டும்.
- கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேப்பம் விதை, நெல்லி வற்றல் என்பவற்றை பொடியாக்கி, பசும்பாலில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வாரத்தில் ஒருமுறை குளிக்க வேண்டும்.