முடி வேரோட கொட்டுதா தடுக்க சூடான க்ரீன் டீ போதும்! என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
முடி உதிர்வை தடுக்க எத்தனை வழிமுறைகள் இருந்தாலும் எளிமையான விஷயங்களை மறந்துவிடுகிறோம்.
முடி உதிர்தலை குறைப்பதில் இந்த எளிமையான விஷயங்கள் எவ்வளவு பயன் அளிக்கின்றன என்பதை தொடர்ந்து செய்து வந்தாலே உங்களுக்கு புரியும்.
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், கனோலா போன்ற எந்த இயற்கை எண்ணெயும் நீங்கள் கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.
இந்த எண்ணெயை இலேசாக சூடாக்கவும். இளஞ்சூடாக இருக்கும் போது உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
வட்ட வடிவில் உள்ளங்கைகளால் அழுத்தம் கொடுத்து மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு ஷவர் கேப் போட்டு ஒரு மணி நேரம் கழித்து கூந்தலை ஷாம்பு கொண்டு அலசி எடுங்கள்.
வாரம் ஒரு முறை ஆயில் மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வலுப்படும்.
சூடான க்ரீன் டீ
சூடான க்ரீன் டீ உச்சந்தலையில் தடவி இந்த கலவையை ஒரு மணி நேரம் விட்டுவிடவும் .
பிறகு கூந்தலை அலசி எடுக்கவும். க்ரீன் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் முடி உதிர்தலை தடுக்கும்.
இது முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் கொடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்யும். முடி வளர்ச்சி நிறைவாக இருக்கும்.