எப்படி இருந்தா நா இப்படி ஆகிட்டேன்: இணையத்தில் ட்ரெண்டாகும் சிம்புவின் வீடியோ
நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்தபோது எடுத்துக் கொண்ட வேர்க்அவுட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சிம்பு
சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், சிறப்பாக நடனமாடுபவர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை கொண்டு தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர்.
இவர் முதன்முதலில் 2002ம் ஆண்டு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நாயகனாக நடித்து தனது திரைப்பயணத்தை தமிழில் தொடங்கினர்.
அதற்கு அடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். மேலும், இவரின் பேரில் பல சர்ச்சை செய்திகளும் அதிகளவாகவே இருந்து வந்தது.
இதனால் இவர் சில காலம் படங்கள் எதிலும் நடிக்காமல் விலகியிருந்து மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க ஆரம்பித்தார்.
வைரல் வீடியோ
இந்நிலையில், சிம்புவின் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் ட்ரெண்டாகி வருகின்றது. வைரல் வீடியோ இந்நிலையில், சிம்புவின் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் ட்ரெண்டாகி வருகின்றது.
சிம்பு தற்போது தனது 48ஆவது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், நீண்ட முடியுடன் உடல் எடையை குறைத்து ஆளே அட்டகாசமாக மாறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
@SilambarasanTR_ #STR48 #ATMAN#SilambarasanTR @prosathish pic.twitter.com/t2tzOnOc9J
— NewCinemaExpress (@newcinemaexpres) October 26, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |