உடல் எடையை குறைத்தது எப்படி? வீடியோவை வெளியிட்டு கண்கலங்கி சிம்பு; கொண்டாடும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்பு அண்மையில் ‘மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. அதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, என்.கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த நாளில் தனது 39-வது பிறந்த நாளை 4.2.2022 கொண்டாடினார் சிம்பு. அதன் பின்னர், சிம்பு உடல் எடை குறைப்பை பற்றி பேசுகையில், வாழ்க்கையில வெயிட் மட்டும் போட்றாதீங்க.. அப்படி போட்டீங்கன்னா குறைக்கனுன்னு நினைக்காதீங்க அதோடு சந்தோஷமா வாழ பழகிக்கோங்க என ஒரு வருத்ததுடனே வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
குறிப்பிட்ட வீடியோ காட்சியானது ரசிகர்களிடையே அதிகளவில் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் சிம்புவின் விடா முயற்ச்சியாலே இதை செய்திருப்பது தெரிகிறது.
கிட்டத்தட்ட தனது உடல் எடையை கிட்டதட்ட 105 கிலோவில் இருந்து 72 கிலோவாக குறைத்துள்ளார் சிம்பு.
இவர் வெளியிட்ட இந்த வீடியோ மூலம், யூடியூப் தளத்தில் 10 லடசம் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.