தந்தையின் உடல்நலக்குறைவு பற்றி சோகத்துடன் நடிகர் சிம்பு வெளியிட்ட அறிக்கை!
நடிகர் இயக்குனருமான டி ராஜேந்தர் உடல் நலக்குறைவால், போரூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருகிறார்.
நேற்றைய தினத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர் சிகிச்சைக்கு பின், ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில், தந்தை குறித்து நடிகர் சிம்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் “எனது தந்தைக்கு நெஞ்சு வலி ஏற்ப்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.
அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாடு அழைத்து செல்கிறோம்.
அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.
ஆபத்து கட்டத்தை தாண்டிய டி.ஆர்! இன்று அறிக்கை வெளியிடுவாரா சிம்பு?
— Silambarasan TR (@SilambarasanTR_) May 24, 2022