திருமணம் செய்ய சொல்லி பிள்ளைகளை டார்ச்சர் பண்ணாதீங்க! சிம்புவின் அதிரடியான பேச்சு
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான சிம்பு 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். அடிக்கடி இவரின் திருமணம் சார்ந்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே வெந்து தணிந்தது காடு திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இசை வெளியீட்டு விழா பேசிய சிம்பு, கல்யாணம் பண்ணிக்க சொல்லி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை டார்ச்சர் பண்ண வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இப்படி கொடுக்கப்படும் அழுத்தங்களால் தான் தவறான திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடப்பதாக கூறினார். அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்னு பிள்ளைகளை விட்டுவிடுங்கள், மேலே இருக்குறவன் அவர்களுக்கான ஒருத்தரை நிச்சயம் அனுப்புவார் என சிம்பு பேசியுள்ளார்.

இதனால், அவரின் இந்த பேச்சை பார்க்கும்போது, அவரது பெற்றோரும் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி சிம்புவுக்கு டார்ச்சர் கொடுத்து வருவதை மறைமுகமாக தெரியவந்துள்ளது.
மேலும், சிம்புக்கு ஏற்றவாறு பெண்ணை இன்னும் பார்க்கவில்லை என்பதே இதில் தெரிகிறது.