வந்தாச்சு ஆரம்பிக்கலாமா?... சிம்புவின் மாஸான எண்ட்ரியை கொண்டாடும் ரசிகர்கள் ; வைரல் ப்ரோமோ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 3 வாரங்களாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், கடந்த வாரத்துடன் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவரின் முடிவுக்கு காரணம் பணிச்சுமை தான். இடைவிடாத படப்பிடிப்பு மற்றும் அரசியல் பணிகள் என தொடர்ந்து பிசியாக இருந்ததால், தற்காலிகமாக விலகுவதாக அறிவித்தார்.
கமலுக்கு பின் யார் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. ரம்யா கிருஷ்ணன் தான் வருவார் என எதிர்ப்பார்த்த நிலையில், செம்ம ட்விஸ்டாக சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்நிலையில், தற்போது வெளியான முதல் ப்ரோமோ காட்சியில் செம்ம மாஸாக சிம்பு வந்தாச்சு ஆரம்பிக்கலாமா என புன்னகையுடன் பேசிய புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் சிம்பு காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.