40 வயதில் சிம்புவுக்கு திருமணம்! பொண்ணு எந்த ஊர் தெரியுமா?
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்தன.
தற்போது சினிமா வேலைகளால் பிஸியாக இருக்கும் நடிகர் சிம்பு, 40 வயதாகி திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
இவருக்கு இந்த வருடத்தில் திருமண செய்து வைக்க வேண்டும் என்ற முனைப்பில் குடும்பத்தினர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
திருமண வேலைகள்
இந்நிலையில், சிம்பு திருமணத்திற்கு பெண் பார்க்கும் வேலைகளில் அவரது பெற்றோரும், தங்கையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
முக்கியமாக பெண் மயிலாடுதுறையை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்களாம்.
இதன் மூலம் நடிகர் சிம்பு விரைவில் திருமணம் செய்யப்போவது குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.