வீடு கட்டும் போது ஏன் வெள்ளி நாகம் வைக்கிறார்கள்? வாஸ்து சொல்லும் சீக்ரெட்
பொதுவாக புது வீடு கட்ட ஆரம்பிக்கும் பொழுது அவரவர் மதங்களின் படி வழிபாடுகள் செய்யப்படும்.
அதே போல் சிலர் வெள்ளி நாகத்தை வைத்து வழிபட்ட பின்னர் கட்டுமானப்பணியை ஆரம்பிப்பார்கள்.
இந்துக்களின் சம்பிரதாயத்தின் படி, ஒருவர் வாஸ்துப்படி வீடு கட்டவில்லையென்றால் அந்த வீட்டில் நிம்மதி இருக்காது. மாறாக வீட்டின் கதவு, ஜன்னல், அறை என்பவைகளை வாஸ்துப்படி நிர்ணயிக்க வேண்டும்.
மேலும், வீடு கட்டுவதற்கு முன் அஸ்திவாரத்தின் போது பூமியில் வெள்ளி பாம்புகள் வைக்கப்படுகின்றன. இது முதல் விதியாக இந்து மக்கள் பார்க்கிறார்கள். இதற்கான காரணங்கள்? ஏன் வைக்கிறார்கள்? என்பதனை தொடர்ந்து பதிவில் காணலாம்.
வெள்ளி நாகம் வைக்க முக்கியமான காரணம்
1. வாஸ்து சாஸ்திரப்படி, வீடு கட்டும் பொழுது வெள்ளி பாம்புகள் (அ) கலசங்களை வைத்தால் வீட்டின் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.
2. ஸ்ரீமத் பகவத் மகாபுரானின் ஐந்தாவது காண்டத்தில் பூமிக்கு அடியில் பாதாள உலகம் இருக்கிறது. இதனை அதிபதி ஷேஷ்நாக் என்பவர் ஆட்சி செய்கிறார். இதனை அடிப்படையாக வைத்து வெள்ள பாம்புகள் வீடு கட்டும் பொழுது பூமிக்கு அடியில் வைக்கிறார்கள்.
3. வீட்டை எதிர்மறையான சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் இந்த சடங்கு செய்யப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |