சூர்யா - ஜோதிகா ரீல் மகளா இது! இப்போ மும்பைல என்ன பண்றாங்க தெரியுமா?
சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா - ஜோதிகாவின் மகளாக நடித்த சிரியா சர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சில்லுனு ஒரு காதல் திரைப்படம்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த காதல் திரைப்படங்களில் ஒன்றாக "சில்லுனு ஒரு காதல்" திரைப்படம் திகழ்கிறது.

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து நடித்த இந்த படம், காதல் மற்றும் குடும்ப உறவுகளை அழகாக சித்தரித்து ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
குறிப்பாக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இப்படத்தில் சூர்யா - ஜோதிகா தம்பதியினரின் மகளான குட்டி ஐசு கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் சிரியா சர்மா சர்மா நடித்திருந்தார்.
தனது இயல்பான நடிப்பாலும், குறும்பான முகபாவனைகளாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், படத்தின் முக்கிய அம்சங்களில் ஒருவராக மாறினார்.

குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய சிரியா சர்மா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். பல மொழி படங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், பின்னர் கதாநாயகியாகவும் சில படங்களில் தோன்றியுள்ளார்.

ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, படிப்பில் கவனம் செலுத்திய இவர் தற்போது பிரபல வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சிரியா சர்மாவின் சமீபத்திய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வேகமாக வைரலாகி வருகின்றன. "குட்டி ஐசுவா இது?" என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அவர் தற்போது மிகவும் மாறியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |