இதுநாள் வரையில் நீங்கள் பார்த்திராத சில்க் சுமிதாவின் புகைப்படங்கள்... அந்த வயதில் எப்படி இருக்கிறார் தெரியுமா?
80களில் பேரழகியாக வர்ணிக்கப்பட்ட சில்க் ஸ்மிதாவின் பழைய புகைப்படங்கள் அவரின் இறந்த நாளில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சில்க் ஸ்மிதா
உடல் மறைந்தாலும் நினைவுகளால் வாழ்பவர்கள் சிலரே அந்த வரிசையில் ரசிகர்கள் மத்தியில் சில்க் ஸ்மிதாவிற்கு தனியிடமே உண்டு. ஆந்திரமாநிலம் ஏலூரு என்ற இடத்தில் பிறந்தவர் தான் சில்க் ஸ்மிதா.
இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. இவர் பிறந்தது ஆந்திரப் பிரதேச மாநிலம் என்றாலும் பூர்வீகம் கரூர் ஆகும். வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு 1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார்.
தமிழ் நடிகரும் இயக்குனருமான வினுச்சக்ரவர்த்தியின் மூலம் வண்டிச்சக்கரம் என்கிற ஒரு தமிழ் திரைப்படத்தில் சில்க் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
அதன் பிறகு தான் இவருக்கு சில்க் ஸ்மிதா என்ற பெயர் வந்தது. பல திரைப்படங்களில் நடித்த இவர், பல திரைப்படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியுள்ளார். இவ்வாறு கொடிக்கட்டி பறந்த வேளையில் தான் 1996ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் திகதி அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக மீட்கப்பட்டார்.
ஆனால் அவர் எவ்வாறு உயிரிழந்தார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்ற பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்காமல் தான் உள்ளது.
இந்நிலையில் சில்க் ஸ்மிதாவின் நினைவு நாளில் அவரின் பழைய புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |