என் வீட்டுக்கு கொஞ்சம் வர்றீயா... இறப்பதற்கு முன்பு பிரபல நடிகைக்கு போன் செய்த சில்க் ஸ்மிதா
என் வீட்டுக்கு கொஞ்சம் வர்றீயா என்று சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன் எனக்கு போன் செய்தார் என்று பிரபல நடிகை ஒருவர் கூறிய செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை சில்க் ஸ்மிதா
தமிழ் சினிமாவில் 80களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவருடைய காந்தக் கண்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஒரு நடிகைக்கு உண்டான அந்தஸ்தையும் மீறி அதிகமான ரசிகர்களின் மனதை இவர் கவர்ந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. ஆனால், அவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்றளவும் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.
சில்க் இறப்பதற்கு முன் எனக்கு போன் செய்தார்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பிரபல கவர்ச்சி நடிகை அனுராதா, சில்க் குறித்த சில தகவல்களை கூறினார்.
அப்போது அவர் பேசுகையில்,
நடிகை சில்க் எனக்கு நெருங்கிய தோழி. சில்க் இறப்பதற்கு முதல் நாள் இரவு எனக்கு போன் செய்தார். அனு... கொஞ்சம் என் வீட்டுக்கு வர்றீயா என்று கேட்டார். அப்போ நான், சில்க்... இப்போ 9.30 மணி ஆகிறது. சதிஷும் இப்போ வீட்டுக்கு வந்துவிடுவார்... ஏதாவது எமர்ஜின்சினா சொல்லு உடனே வருகிறேன் என்று கூறினேன். அப்போ சில்க், ‘இல்ல, ஒன்னும் இல்ல.. சும்மா தான்’ என்று கூறினார்.
மீண்டும் சில்க், அப்போ நாளைக்கு காலையில சீக்கிரம் வந்துடுவீயா? என்று கேட்டார். அப்போ, நான் சில்க்.. அபி காலையில் 8.30 க்கு பள்ளிக்கு அனுப்பிவிட்டு அப்படியே உன்னை பார்க்க வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன்.
மறு நாள் காலையில் என் கணவர் சதீஷ் டிவியை பார்த்து ஷாக்காகி அனு... அனு.. என்று கத்தினார். நான் பதறி அடித்து உடனே ஓடி வந்து பார்த்தேன்.
டிவியில் ஃபிளாஷ் நியூஸ்... சில்க் தற்கொலை என்று... இதைப் பார்த்ததும் என்னால், தாங்கிக் கொள்ள முடியாத துக்கம். இதை நினைத்து இப்ப வரைக்கும் நான் வேதனைப்படுகிறேன்.
ஒரு வேளை சில்க் கூப்பிட்டபோது, நான் உடனே போயிருந்தா... என்கிட்ட ஏதாவது சொல்லியிருப்பா... என்று வேதனையோடு பேசினார்.