நான் செத்தா நீ வருவியா? பிரபல நடிகரிடம் கேட்ட சில்க் ஸ்மிதா! சில தினங்களில் தற்கொலை
கவர்ச்சி நடிகையாக கொடிகட்ட பறந்த சில்க் ஸ்மிதா இறந்த பின்பு அவரது இறுதி சடங்கிற்கு ஒரே ஒரு நடிகர் மட்டும் கலந்து கொண்டது தற்போது தெரியவந்துள்ளது.
நடிகை சில்க் ஸ்மிதா
நடிகை சில்க் ஸ்மிதா 1980களில் கவர்ச்சி நடிகையாக வலம்வந்து ரசிகர்களைக் கவர்ந் கவர்ந்தவர். அப்பொழுது மட்டுமின்றி 2கே கிட்ஸ்களும் இவரை தெரியாமல் இருப்பதில்லை.
ஆம் தன்னுடைய கொஞ்சும் பேச்சாலும், காந்த கண்களாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வைத்தவர். இவர் 1980ம் ஆண்டில் வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.
குணசித்திர நடிகையாக இவர் வலம்வந்தாலும், கவர்ச்சி நடிகையாகவே பிரபலங்கள் அவதானித்தனர். இவரின் நடனத்தை பார்ப்பதற்கே திரையரங்கில் கூட்டம் அலைமோதும்.
புகழின் உச்சத்தில் கொடிகட்டி பறந்த அவரின் வாழ்க்கையில் ஏமாற்றங்களும், வலிகளும் மட்டுமின்றி மன அழுத்தம், தனிமை இவற்றினால் அவதிப்பட்டார்.
திடீர் தற்கொலை
1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவரது மரணம் கொலையா? தற்கொலையா? என்று அவிழ்க்க முடியாத மர்மமாகவே இருக்கின்றது.
சமீபத்தில் இவரைக் குறித்து மூத்த பத்திரிகையாளரான தோட்டா பாவாநாராயணா கூறுகையில், சில்க்கின் இறுதி சடங்கிற்கு ஒரே ஒரு நடிகர் மட்டும் தான் வந்திருந்தார். அவர் அர்ஜுன் மட்டுமே... நேரில் வந்து அஞ்சலி செலுத்திய இவர் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளாராம்.
அதாவது சில்க் ஸ்மிதா அர்ஜுனிடம், 'நான் இறந்து போனால் என் சாவுக்கு நீ வருவாயா' என்பது போல் கேட்டுள்ளார், இதை கேட்ட அர்ஜுன், என்ன பேச்சு இதெல்லாம் என்று பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.
ஆனால் அவர் கேட்ட சில தினங்களில் சில்க் தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்ட அர்ஜுன் பெரும் வேதனையடைந்ததாகவும் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |