நம்பியாரை நேருக்கு நேராக அவமானப்படுத்திய சில்க் ஸ்மிதா - ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்!
இவரை யார் கூப்பிட்டா... என்று பழம்பெரும் வில்லன் நடிகர் நம்பியாரை நேருக்கு நேராக சில்க் அவமானப்படுத்தியதாக பிரபலம் ஒருவர் கூறிய தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சில்க் ஸ்மிதா
தமிழ் சினிமாவில் 80களில் கனவு கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவருடைய காந்தக் கண்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஒரு நடிகைக்கு உண்டான அந்தஸ்தையும் மீறி அதிகமான ரசிகர்களின் மனதை இவர் கவர்ந்தார்.
தமிழ் சினிமாவில், 1980ம் ஆண்டு வெளிவந்த “வண்டிச்சக்கரம்” படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
நம்பியாரை அவமானப்படுத்திய சில்க் ஸ்மிதா
இன்றளவும் இவரது மரணத்தில் மர்மம் இன்னும் விலகாமல் இருக்கும் நிலையில், இவரைக் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகின்றது.
சமீபத்தில் பிரபல நடன கலைஞரான புலியூர் சரோஜா ஒரு சேனலில் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் சில்க் ஸ்மிதா பற்றி சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், நடிகை சில்க் ஸ்மிதா, யாருடனும் தேவையில்லாமல் பேச மாட்டார். யாருக்கும் பணிந்து போகவும் மாட்டார். ஒரு தடவை மூத்த நடிகரான எம்.என். நம்பியாரை நேராகவே அவமானப்படுத்தி விட்டார் சில்க் ஸ்மிதா. ஒரு படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தார் நம்பியார்.
அப்படத்தில் நம்பியாருடன், சில்க் ஸ்மிதா நடனம் ஆடுவது போல் ஒரு பாடல் காட்சி இருந்தது. ஆனால், வயதான நடிகருடன் ஆட முடியாது என்று தெரிவித்துவிட்டார். இவரை எல்லாம் யார் நடிக்க வர சொன்னாங்க.
வயதான காலத்தில் எதற்கு இந்த வேலை என்று நம்பியார் முன்பே அவமானப்படுத்தும்படி சில்க் பேசிவிட்டார். இவர் பேசியதைப் பார்த்த ஒட்டு மொத்த படக்குழுவினரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
பதறிப்போன நான் உடனே நம்பியாரிடம் சில்க் ஸ்மிதா பேசியதற்காக மன்னிப்பு கேட்டேன். ஆனால், நம்பியார் கோபப்படாமல் பெருந்தன்மையாக சிரித்துவிட்டு பரவாயில்லை என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தினார்.
இதன் பிறகு, நான் சில்க் ஸ்மிதாவிடம் இப்பாடலுக்கு நீ ஆடாவிட்டால் இனி உன்னுடன் வேலை பார்க்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். இதன் பிறகு, சில்க் ஸ்மிதா நம்பியாருடன் இணைந்து நடனமாடினார் என்று தெரிவித்துள்ளார்.