கொளுத்தும் வெயிலில் வேர்வை சொட்ட நிற்கும் சிம்பு! உடல் எடையை குறைத்ததால் அதிர்ச்சி
வெந்து தணிந்தது காடு படத்தின் பிரத்யேக ஸ்டில்களை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வெந்து தணிந்தது காடு
'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக இந்த படத்திற்காக இணைந்துள்ளது.
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக குஜராத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை சித்தி இத்னானி நடிக்கிறார். நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் சிம்புவின் அம்மாவாக நடிக்கிறார்.
இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு நடக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய புகைப்படம் வெளியீடு
இந்நிலையில் படத்தயாரிப்பு நிறுவனம் படத்தின் புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளது.
சிம்பு ரயில் நிலையத்தில் நிற்கும் ஸ்டில், காட்டுக்குள் தொரத்தி கம்புடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் ஒரு ஸ்டில், சிம்பு கௌதம் மேனனுடன் பேசுவது போல் ஒரு ஸ்டில் மற்றும் மாடிப்படியில் ஏறி வரும் ஸ்டில் என 4 ஸ்டில்களை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


