மாஸ் காட்டும் சிம்பு : என்ன ரகசியம் தெரியுமா?
தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு தனி பாதையை அமைத்துக்கொண்டவர் தான் சிலம்பரசன். ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என சிம்பு அழைக்கப்படுகின்றார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், பன்முக திறமை கொண்டவராகவும் வலம் வருபவர் சிம்பு. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
20 வயது இளைஞனை போல் தோற்றமளிக்க காரணம்
இவர் நடிப்பு மட்டுமல்லாது பாடுவது, பாடல் வரிகள் எழுதுவது, இயக்குவது போன்ற பல திறமைகளை கற்ற சகலகலா வல்லவர். அவர் தற்போது தனது உடல் எடையை குறைத்து 40 வயதிலும் 20 வயது இளைஞனை போல் தோற்றமளிக்கின்றார் இவரின் ஸ்டைவான பட்டையை கிளப்பும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிம்பு, சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை தவிர உடலுக்கு ஊக்கம் கொடுக்கும் விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வந்தாராம். அதாவது கிரிக்கெட், பாட்மிட்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாட்டு உடலுக்கு அதிக உழைப்பைக் கொடுப்பாராம்.
உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி, டயட் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அவர் உடல் எடையை குறைத்துள்ளார்.
இவர் எடையைக் குறைப்பதற்காக சிம்பு வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டாராம். மரக்கறிகளும், பழக்களும், கீரை வகைகளும் அதிகம் எடுத்துக் கொண்டாராம்.
அது மட்டுமன்றி சிம்பு தன் உடல் ஆரோக்கியம் குறித்தும் தன்னை நேர்த்தியாக வைத்துக்கொள்வதிலும் அதிகம் அக்கறை செலுத்துவாராம். இதுவே இவரின் இளமையின் ரகசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |