மிதுன ராசியில் சுக்கிரன் சேர்க்கை- ஜாக்போட் அடிக்கப்போகும் ராசியினர் யார் தெரியுமா?
கிரக சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன்கள் பார்க்கப்படுகின்றன.
இதன்படி, நவகிரகங்களில் முதன்மையானவராக சூரிய பகவான் இருக்கிறார். இவர் ஜூன் 15ஆம் திகதி முதல் மிதுன ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
இந்த காலத்தில் மிதுன ராசியில் சுக்கிர பகவானும் ஆதிக்கத்தை செலுத்துவார்.
கிரகங்களின் செயற்கையால் சுக்கிர பகவானும், சூரிய பகவானும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கின்றன. இதனால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
அந்த வகையில், சுக்ராதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் குறித்துக் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
சுக்ராதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம்
1. கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் நீண்ட நாட்கள் முற்றுப்பெறாமல் இருந்த காரியங்கள் இந்த காலப்பகுதியில் நிறைவடையும். கன்னி ராசிக்காரர்களுக்கு முன்பு இருந்தது விட வருமானம் அதிகரிக்கும்.
நீங்கள் வியாபாரம் செய்பவர்கள் என்றால் உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் அமைவார்கள். நீண்ட நாட்களாக இருக்கும் கெட்ட பெயர்கள் நீங்கி, நல்ல மதிப்பு உண்டாகும்.
2. கும்பம்
கும்ப ராசியில் 5ஆம் வீட்டில் சுக்ர ஆதித்ய ராஜயோகம் ஏற்படவுள்ளது. இதனால் இவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். சரியான வேலைவாய்ப்பு கிடைக்கும். அத்துடன் வணிகம் தொடர்பிலான வருமானங்கள் அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிகமாக அக்கறை கொள்ளுங்கள். செய்யும் காரியங்களில் பொறுமை காத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
3. சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த காலப்பகுதியில் ஏற்கனவே இருந்த எதிரிகளின் தொல்லை நீங்கும். வேலைச் செய்யும் இடத்தில் பணியுயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தில் சண்டைகள் இருந்தால் அதுவும் நீங்கும். சமூகத்தில் இருந்த அவப்பெயர் நீங்கி நல்ல மரியாதை கிடைக்கும்.
தொழில் செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். அதனை பயன்படுத்தி லாபம் பெற்றுக் கொள்ளுங்கள். வெளிநாடு சென்று வர வாய்ப்பு கிடைத்தால் அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |