சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டால் முதலில் காட்டும் முக்கிய அறிகுறிகள் என்ன?
உடலில் மிக முக்கியமான உறுப்புக்களில் சிறுநீரகமம் ஒன்று. நாம் உணவின் பழக்கவழக்கம் காரணமாக அதன் சேதம் தொடங்கும். இதனால் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக நீர்க்கட்டிகள், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக தொற்றுகள் போன்ற பல வகையான சிறுநீரக நோய்கள் இருக்கலாம்.
சிறுநீரக நோயின் ஆரம்ப அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால் போக போக அறிகுறிகள் காட்டும்.
குறிப்பாக நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் அதிகம்.எனவே இந்த பதிவில் சிறுநீரக நோயின் முக்கிய அறிகுறிகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்
பலருக்கு இரவில் எழுந்து சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை உணர்ந்தால் இது சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது உடல் திரவங்கள் சரியாக வடிகட்டப்படுவதில்லை, இது சிறுநீர் கழிக்கும் அதிர்வெண்ணை பாதிக்கிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.
சிறுநீரக செயலிழப்பு உடலில் நீர் சமநிலையை சீர்குலைக்கும். இதன் காரணமாக இரவில் அதிக தாகம் எடுக்கும். இரவில் மீண்டும் மீண்டும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்தால். இது சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
சிறுநீரக பிரச்சனைகள் சிறுநீர் பாதையில் தொற்று அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் ஏற்படலாம். இதற்கு சிறுநீரக தொற்று காரணமாக இருக்ககலாம்.
எனவே உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம். சிறுநீரில் இரத்தம் இருப்பது சிறுநீரக தொற்று, கற்கள் அல்லது பிற கடுமையான பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
சிறுநீரில் இரத்தம் தெரிந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். இது ஒரு தீவிரமான நிலையாகும். இதற்கு மருத்துவரிடம் ஆரோசனை பெறுவது முக்கியம்.
சிறுநீரகங்கள் உடலில் இருந்து நச்சுப் பொருட்களை முறையாக அகற்ற முடியாதபோது, அது உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்துகிறது. இது தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனதல் ஒருவர் அடிக்கடி தூக்கத்திலிருந்து எழலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |