இந்த 2 அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா? கண்டிப்பா சர்க்கரை நோய் தானாம்
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்பு இல்லாதது என பல காரணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆரம்ப கட்ட அறிகுறிகள் இருக்கும்போதே, சர்க்கரை நோயை கண்டறிந்து விட்டால் இதயநோய்கள், சிறுநீரக நோய்கள் உட்பட ஆபத்தான பல நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுவது, அதிகமாக சிறுநீர் கழித்தல், உடல் சோர்வு மற்றும் தலைச்சுற்றல்.
அத்துடன் வாயில் புண்கள் மற்றும் துர்நாற்றம் வீசுவதும் சர்க்கரை நோயின் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.
உங்களது வாயில் அசாதாரணமாக துர்நாற்றம் வீசினால் மருத்துவரை அணுகி சர்க்கரையின் அளவை பரிசோதித்து கொள்ளுங்கள்.
எந்த நோயாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நல்லதே!!