மூன்று வேளையும் அரிசி உணவு சாப்பிடுபவரா நீங்கள்? இந்த எச்சரிக்கை உங்களுக்கே
நாம் காலம் காலமாக அரிசியினை முக்கிய உணவாக உட்கொண்டு வருகிறோம். தினமும் ஒரு வேளை அரிசி சாதம் உண்டால் உங்கள் உடலிற்கு நன்மை விளைவிக்கும். அதுவே மூன்று வேலையும் நீங்கள் அரிசி சாதம் உண்டு வந்தால் உங்கள் உடலிற்கு கேடு விளைவிக்கும்.
அந்தவகையில் வெள்ளை அரிசி உணவு எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
அதிகமான கலோரி
அரிசியில் மற்ற தானியங்கள் மற்றும் சிறு தானியங்களை காட்டிலும் அதிக அளவில் கலோரிகள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது தேவையற்ற கலோரிகள் உடலில் கொழுப்பாக சேர்கின்றது.
அரிசியில் குறைந்த அளவு நார்சத்து உள்ளது. அதனால் உங்கள் உடலில் மாவுச்சத்தானது அதிக அளவில் சேர்ந்து இரத்த சர்க்கரையின் அளவினை அதிகரிக்கும். இதன் விளைவே சர்க்கரை வியாதி ஆகும்.
உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்கள் அரிசி அதிக அளவில் எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளவும்.
இன்றைய ராசிபலன்! சிறப்பான நாளில் அதிர்ஷ்டத்தை தக்கவைக்கும் ராசி யார்?
இருதய கோளாறு
அரிசியினை நாம் உண்டு வரும்போது எரிக்கப்படாத கலோரிகள் நமது உடலில் கொழுப்பாக சேர்கின்றன. அவ்வாறு சேரும் கொழுப்பானது இருதய இரத்த நாளங்களில் சேர்கின்றது. இதன் விளைவாக உங்களுக்கு இரத்த அழுத்தம், இருதய கோளாறு, போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
தோல் நீக்கப்பட்ட வெள்ளை அரிசியில் குறைந்த அளவே நார்ச்சத்து உள்ளது. நமது செரிமான ஆரோக்கியத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் மலச்சிக்கலை தடுக்கவும் நார்ச்சத்து மிக மிக முக்கியம்.