நீங்கள் இரவு வேளையில் வேலை பார்ப்பவரா? அப்போது உங்களுக்கு இந்த நோய் இருக்குமாம்
பொதுவாக அலுவலகங்கள் அல்லது கம்பனிகளில் வேலை பார்க்கும் போது இரவு வேளைகளில் வேலை பார்க்க வேண்டிய சூழல் இருக்கும்.
இதனால் நாளடைவில் நமக்கும் பல பிரச்சினைகளை கொண்டு வருகிறது. என்றால் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?
ஆம், நாம் எங்கு வேலை பார்த்தாலும் உடல் ஆரோக்கியம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாகும். பெரும்பாலானோர் இரவு வேளைகளில் வேலை பார்க்க மாட்டார்கள்.
காரணம், காலையில் நேரத்திற்கு எழும்ப முடியாது, ஒரு நிறைவான தூக்கம் இருக்காது, கண் கருவளையம் இருக்கும், மன உளைச்சல் இருக்கும், நிம்மதி இருக்காது என பல பிரச்சினைகளை நினைவில் வைத்து தான்.
இவையனைத்தையும் விட இரவில் வேலைச் செய்யும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கிறது. மேலும் மாரடைப்பு பிரச்சினையும் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில் இரவு நேரத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு என்ன நடக்கும், அதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து தொடர்ந்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.