நீண்ட நேரம் ஏசி-யில் இருக்கீங்களா? இளமையிலேயே வயதான தோற்றம் ஏற்படுமாம்
ஏசி-யில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பாதிப்புகள் என்ன?
ஏ.சி-யில் அதிக நேரம் இருப்பதால் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து, சரும வறட்சி, எரிச்சல் மற்றும் கோடுகள் உருவாகி, விரைவில் வயதான தோற்றத்தினை ஏற்படுத்தும்.
உ்டலில் நீரிழப்புக்கு வழி வகுப்பதுடன், தாகம், சோம்பல் மற்றும் சோர்வு ஏற்படும். அதிக நேரம் இருப்பவர்கள் தண்ணீர் கட்டாயமாக பருக வேண்டும்.
ஏ.சி குறைந்த காற்றை வெளியிடும் போது, கண்களில் ஈரப்பதம் குறைந்து கண் எரிச்சல், சிவப்பு மற்றும் கண் அரிப்பு இவைகள் ஏற்படும்.
ஏ.சி.யின் காற்று நுரையீரல் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தி, சளி, இருமல் போன்ற நோய்களை அதிகரிக்கும். ஆதலால் ஏசியை சரியாக பராமரிப்பது அவசியமாகும்.
உடலில் எண்ணெய் உற்பத்தி குறைந்து, சரும வறட்சி, முடி உதிர்வு மற்றும் வறட்சி போன்ற பிரச்சனை ஏற்படும்.
எக்ஸிமா, சொரியாசிஸ் மற்றும் ரோசாசியா போன்ற பிரச்சனைகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஏ.சியில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்த்து, இடையிடையே வெளியில் சென்று சுற்றியுள்ள சூழலுக்கு மாற வேண்டும். நீர் மற்றும் பழச்சாறு இவற்றினை பருகி உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |