அடிக்கடி முகத்தில் ஐஸ் கட்டியை தேய்கிறீங்களா? சருமத்தில் இந்த மாற்றம் ஏற்படும்
அடிக்கடி முகத்தில் ஐஸ்கட்டியை தேய்ப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
Side Effects of Rubbing Ice Cube on Face : முகத்திற்கு ஐஸ்கட்டி தடவுவது தற்போது சரும பராமரிப்பு வழக்கத்தில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இது சருமத்தை குளிர்விப்பது மட்டுமல்லாமல், வீக்கம், முகப்பருவை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் அடிக்கடி இதை தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளபளக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இப்படி பயன்படுத்துவதற்கு ஒரு விதிமுறையும் இருக்கிறது. அதாவது அதிக நேரம் முகத்தில் ஐஸ்கட்டியை பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மைக்கு பதிலாக, தீங்கு தான் விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
முகத்தில் ஐஸ்கட்டி பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்:
1. சரும எரிச்சல் :
நீண்ட நேரம் முகத்தில் அதுவும் நேரடியாக ஐஸ் கட்டியை பயன்படுத்தினால் சருமம் எரிச்சலடையும், சிவந்து போகும் அல்லது கொப்புளமாக கூட மாறக்கூடும். இதைவிட சருமத்தை மரத்துப் போக கூட செய்து விடும்.
2. ஈரப்பதம் இழப்பு :
ஐஸ் கட்டியை அடிக்கடி முகத்திற்கு பயன்படுத்தினால் சருமத்தில் இருக்கும் இயற்கையான ஈரப்பதம் இழக்கப்படும். இதன் விளைவாக சருமம் வறண்டதாகவும், உணர்திறன் மிக்கதாகவும் மாறிவிடும். குறிப்பாக, வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது நல்லதல்ல. அதுபோல உங்களது சருமம் உணர்திறன் கொண்டதாக இருந்தால் நேரடியாக ஐஸ் கட்டியை முகத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
3. ரத்த நாளங்கள் சேதமடையும் :
ஐஸ் கட்டி முகத்திற்கு அடிக்கடி பயன்படுத்தினால் சருமத்தை அது சேதப்படுத்தும். ஐஸ்கட்டியின் குளிர்ச்சியான பண்பு மூக்கு மற்றும் கன்னங்களின் மென்மையான அடுக்குகளை செய்தப்படுத்தி, சருமத்தில் சிவப்பு புள்ளிகளை ஏற்படுத்தும்.
4. சரும வெடிப்பு :
முகத்திற்கு ஐஸ் தடுவுவது நல்லது என்றாலும், சருமத்தில் வியர்வை, தூசி அல்லது மேக்கப் இருந்தால் ஐஸ் தடவினால் அது சருமத்தின் துளைகளை அடைத்து வெடிப்புகளை ஏற்படுத்தும்.
முகத்திற்கு ஐஸ் கட்டியை பயன்படுத்த சரியான வழி எது?
முகத்திற்கு நேரடியாக பயன்படுத்தாமல். அதற்கு பதிலாக ஒரு சுத்தமான துணி அல்லது மென்மையான பருத்தியில் சுற்றி உங்களது முகத்தில் தடவ வேண்டும். ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஒருபோதும் ஐஸ்கட்டியை முகத்தில் தேய்க்க வேண்டாம். முக்கியமாக முகத்தை நன்கு கழுவி காய்ந்த பிறகு தான் ஐஸ் கட்டியை தடவ வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |