பிரியாணியை ஓவர்டேக் செய்யும் புதினா சாதம்! வெறும் 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
பிரியாணியை ஓவர்டேக் செய்யும் புதினா சாதம் எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மதிய உணவு வேளை என்று வந்துவிட்டாலே பெரும்பாலான நபர்கள் தேடுவது சாதமாகத் தான் இருக்கும். அதிலும் பல வகையான காய்கள், குழம்பு, ரசம் இவற்றினை வைத்து சாப்பிடுவது உண்டு.
ஆனால் ஒரு சிலர் கலவை சாதத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் புதினா சாதத்தை பிரியாணியை மிஞ்சும் அளவிற்கு எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 2 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1 (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 20 பல்
இஞ்சி - 10 கிராம்
தேங்காய் துருவல் - 1 கப்
பட்டை - 1
லவங்கம் - 1
அன்னாச்சி பூ - 1
மிளகு - 1
சோம்பு - 1 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
நெய் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
புதினா சாதம் செய்வதற்கு முதலில் பாஸ்மதி அரிசியை தண்ணீரில் கழுவி 10 நிமிடம் ஊற வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, லவங்கம், அன்னாசி பூ, மிளகு கொண்டு தாளித்து, பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றினை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
தொடர்ந்து அதில் தேங்காய் துருவல், புதினா, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து சுமார் 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.
image: pinterest
பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளது தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் போன்று அரைத்து எடுக்கவும்.
தற்போது குக்கரை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேற்றிலை, நீளமாக நறுக்கிய வெங்காயம், பிரியாணி இலை இவற்றை சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவைச் சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு, பாஸ்மதி அரிசியை சேர்த்து, இரண்டரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
பின்பு குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும். குக்கரில் விசில் போனதும், ஒரு முறை கிளறி விட்டால் சுவையான புதினா சாதம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |