தினசரி இஞ்சி சேர்த்துக்கொண்டால் இத்தனை ஆபத்தா? யாரெல்லாம் சாப்பிட கூடாது
பொதுவாகவே நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இவற்றுள் அலபப்ரிய மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி உடல் ஆரோகியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இஞ்சியில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல இதில் பல்வேறு பக்கவிளைவுகளும் காணப்படுகின்றது.
இஞ்சியை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் என்ன ஆபத்து என்பது குறித்தும் யாரெல்லாம் இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
கர்ப்பிணிகள்
இஞ்சியிலிருக்கும் செரிமானத்துக்கு உதவும் சில சத்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது அல்ல.வயிறு சுருங்குதல் அல்லது குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க அது காரணமாக அமைகின்றது.
குறிப்பாக, பிரசவத் திகதி நெருங்கும் போது கர்ப்பினி பெண்கள் இதைப் பயன்படுத்தவே கூடாது. செரிமானப்பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்கள் மட்டும், மிகக் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.
ரத்த கோளாறு உடையவர்கள்
இது ரத்த ஓட்டத்துக்கு உதவி செய்யும் என்பதால், பிளட் டிஸ்ஆர்டர் (Blood Disorder) எனப்படும் ரத்தக்கோளாறு இருப்பவர்கள், இதைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.
உதாரணமாக, சர்க்கரைநோய், உடல்பருமன், இதயக்கோளாறு, ரத்த ஒழுக்கு (Hemophilia) இருப்பவர்கள், ரத்தம் உறைதல் (Blood clotting) பிரச்னை உள்ளவர்கள் இஞ்சி சேர்த்ததுக்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது.
சிகிச்சை ஏதேனும் எடுப்பவர்கள்
சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், பீட்டா - பிளாக்கர், இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், இதயக்கோளாறுகளுக்கு சிகிச்சை எடுப்பவர்கள், ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கான மருந்து எடுத்துக்கொள்பவர்கள் உணவில் இஞ்சி சேர்த்துக்கொள்வதை முற்றிலும் தவித்தல் நல்லது.
இஞ்சி பொதுவாக இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என்றாலும், உயர் ரத்த அழுத்தத்துக்காக மருந்து உட்கொள்பவர்கள் இதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் இது குறித்த மருந்துக்களுடன் இணைந்து பாதக விளைவை கொடுக்கும்.
மூலிகை சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒருவர் இஞ்சியைச் சேர்த்துக்கொண்டால், இஞ்சியின் தன்மை அதிகரிக்கத் தொடங்கும்.அதனால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இந்த நிலை, ரத்தம் உறைவதை முற்றிலுமாகத் தடுத்து, ரத்தப்போக்கை ஏற்படுத்தும்.
பித்தப்பைக் கல் இருப்பவர்கள்
இஞ்சி பித்த நீர் சுரப்பதற்கு துணைப்புரியும் என்பதனால், பித்தப்பையில் கல் இருப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.
முழுதாக இஞ்சியை இடிக்காமல் சேர்த்துக்கொள்வது, குடலில் அடைப்பை ஏற்படுத்துவது போன்ற அபாயத்தை ஏற்படுத்தும்.
அதனால் அல்சர் இருப்பவர்களும் இஞ்சி சேர்த்துக்கொள்வதில் அவதானமாக இருக்க வேண்டும்.
அருவை சிகிச்சைக்கு தயாராகுபவர்கள்
ஏதாவது ஒரு நோய்க்கான சிகிச்சைக்காக ஆபரேஷன் செய்யத் தயாராகும் நபர்கள், இஞ்சியை உணவில் சேர்க்கக் கூடாது. ஏனெனில், இஞ்சி அதிக ரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும்.
ஆகவே, ஆபரேஷனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே இஞ்சியைத் முற்றாக நிறுத்திவிடவேண்டும்.
எடை குறைவாக இருப்பவர்கள்
இஞ்சியில் இருக்கும் நார்ச்சத்துகள், வயிற்றில் பி.எச் நிலையை அதிகரிக்கும். மேலும், செரிமானத்துக்குத் தேவையான என்சைம்களை தூண்டியபடி இருக்கும்.வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும்.
இது, விரைவாக உணவை சமிபாடடைய வைக்கின்றது. இந்த நிலை தொடர்ந்தால், எடை இன்னமும் குறையத் தொடங்கும். கூடுதலாக, முடி உதிர்தல், மாதவிடாய்க் கோளாறுகள், தசைகளில் சத்துக் குறைதல் போன்ற அபாய நிலையை தோற்றுவிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |