தினசரி உணவில் இஞ்சி சேர்ப்பவரா நீங்க? யாரெல்லாம் தவிர்க்கனும்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது. இவற்றுள் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த இஞ்சி உடல் ஆரோகியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இஞ்சியில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல இதில் பல்வேறு பக்கவிளைவுகளும் காணப்படுகின்றது.
இஞ்சியை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் என்ன ஆபத்து என்பது குறித்தும் யாரெல்லாம் இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
யாரெல்லாம் சாப்பிட கூடாது?
இஞ்சியிலிருக்கும் செரிமானத்துக்கு உதவும் சில சத்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்தது அல்ல.வயிறு சுருங்குதல் அல்லது குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்க அது காரணமாக அமைகின்றது.
இது ரத்த ஓட்டத்துக்கு உதவி செய்யும் என்பதால், பிளட் டிஸ்ஆர்டர் (Blood Disorder) எனப்படும் ரத்தக்கோளாறு இருப்பவர்கள், இதைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.
உதாரணமாக, சர்க்கரைநோய், உடல்பருமன், இதயக்கோளாறு, ரத்த ஒழுக்கு (Hemophilia) இருப்பவர்கள், ரத்தம் உறைதல் (Blood clotting) பிரச்சினை உள்ளவர்கள் இஞ்சி சேர்த்ததுக்கொள்வதை தவிர்ப்பது சிறந்தது.
அதிகப்படியான இஞ்சி உட்கொள்வதால் ஏற்படும் அடிப்படை பக்க விளைவுகளில் தோல் வெடிப்பு, கண் சிவத்தல், மூச்சுத்திணறல், அரிப்பு, வீக்கம், கண்கள் அரிப்பு மற்றும் தொண்டை அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் அடங்கும்.
அதிகப்படியான இஞ்சியை உட்கொண்டால் இதயத் துடிப்பு அதிகமாகும். இது இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.மேலும் மங்கலான கண்பார்வை, தூக்கமின்மை பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.
சிகிச்சை ஏதேனும் எடுப்பவர்கள் சர்க்கரைநோய்,உயர் ரத்த அழுத்தம், பீட்டா - பிளாக்கர், இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள், இதயக்கோளாறுகளுக்கு சிகிச்சை எடுப்பவர்கள், ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கான மருந்து எடுத்துக்கொள்பவர்கள் உணவில் இஞ்சி சேர்த்துக்கொள்வதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |