வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடிக்கிறீங்களா? இந்த ஆபத்தான பிரச்சனைகள் வரும்
பொதுவாக எல்லோரும் காலையில் எழுந்தவுடன் பால் குடிப்பார்கள் எல்லோரும் இல்லை சிலர். பால் ஒரு நிறையுணவாகும். பாலில் அதிகளவான கல்சியம் இருக்கிறது. இது எலும்புகளை வலுவாக்க உதவும்.
இந்த நிலையில் பாலை குடிக்கும் போது அதை வெறுமையாக குடிக்காமல் மஞ்சள் கலந்து குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். மஞ்சள் ஒரு நச்சு நீக்கும் பொருளாக இருந்தாலும் இதை பாலில் கலந்து வெறுவயிற்றில் குடிப்பது ஒரு சில பிரச்சனைகளை கொண்டு வரும்.
எனவே காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்
காலை எழுந்தவுடன் வெறு வயிற்றில் மஞ்சள் பால் குடிக்கும் போது அது இரைப்பையில் அமிலத்தை உண்டாக்கும். இதனால் வயிற்று உப்புசம், வயிற்று வலி போன்றவை ஏற்படும்.
மஞ்சள் நச்சு நீக்கியாக செயற்பட்டாலும் இதை பாலில் கலந்து குடித்தால் சிலர் உடல் வாகுக்கு ஒத்து போகாமல் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது தவிர தோல் வெடிப்பு மற்றும் சுவாச பிரச்சனையையும் ஏற்படுத்தும்.
மிகவும் முக்கியமாக அலர்ஜி இருப்பவர்கள் இந்த மஞ்சள் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மஞ்சள் இயற்கையாகவே இரத்தத்தை தாக்கும் பண்பை கொண்டது. இது ஒரு சிலருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட காரணமாக அமைகிறது.
ஏதாவது உடல்நல பிரச்சனை இருந்தால் வெறும் வயிற்றில் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு ஹார்மோன் பிரச்சனைகள் இருக்கும். இதில் மிகவும் முக்கியமாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜா ஹார்மோனில் மாற்றம் ஏற்படும்.
அதுமட்டுமின்றி மஞ்சளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது மாதவிடாய் காலத்தில் மாற்றங்கள் ஏற்படும். பிபி சர்க்கரை நோய் இதய நோய் கொண்ட நபர்களாக இருந்தால் மஞ்சள் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். மீறி குடித்தால் உடல் நலம் மிகவும் மோசமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |