குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கனுமா? இந்த பழங்களை கட்டாயம் எடுத்துக்கோங்க
நோய் எதிர்ப்பு சக்திக்கு குளிர்காலத்தில் சாப்பிடக்கூடிய 5 பழங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குளிர்காலம்
பொதுவாக குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே, நோய்களும் வரிசை கட்டி வந்துவிடுகின்றது. ஆம் குளிர்ந்த காற்று, பனி, மழை இவற்றினால் உடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு பல நோய்கள் ஏற்படுகின்றது.
குளிர்காலங்களில் நமது உடலை எப்பொழுதும் சூடாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். அவ்வாறு நாம் வைத்துக் கொண்டால் தான் சளி, இருமல், காய்ச்சல் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும்.
மேலும் இவ்வாறான காலங்களில் முடிந்தவரை சூடான உணவுகளையே தான் உண்ண வேண்டும். மேலும் குளிர்காலத்தில் நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பழங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
குளிர்காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பழங்கள்
வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகின்றது.
நீர்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த ஆப்பிள்கள் குளிர்காலத்திற்கு ஏற்றவை, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன மற்றும் செரிமானத்திற்கு உதவுகின்றது.
ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த மாதுளம்பழங்கள் குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகின்றது.
வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள கொய்யாப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கின்றன. மேலும் குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது.
வைட்டமின்கள் ஏ மற்றும் சி நிறைந்த பப்பாளி, குளிர்காலத்தில் செரிமானத்தை மேம்படுத்தவும் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |