சுவையான காபியை யாரெல்லாம் குடிக்க கூடாது? மீறினால் ஆபத்து இதுதான்
சோர்வாக இருக்கும் போது, தூக்கம் வரும் போது, வேலை செய்யும் போது காபி குடிக்கும் பழக்கம் இருப்பது வழக்கம். சிலருக்கு காபி மீது அவ்வளவு ஏக்கம் இருப்பதால், அவர்கள் ஒரு நாளைக்கு நான்கைந்து முறை காபி குடிப்பார்கள்.
காபியில் காணப்படும் காஃபின் மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது நம் உடலில் டோபமைனின் அளவையும் மேம்படுத்துகிறது. ஆனால் இதை ஒரு சில பிரச்சனை இருப்பவர்கள் குடிக்க கூடாது அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
காபி குடிக்க கூடாதவர்கள்
இரத்த அழுத்த நோயாளிகள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தவறுதலாக கூட காபியை உட்கொள்ள கூடாது. அவர்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள, அவர்கள் காபியிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
மீறி குடித்தால் தூக்கத்தைப் பாதிக்கலாம். மேலும் இதன் காரணமாக தூக்கமின்மை ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. தூக்கமின்மை இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
ஆஸ்டியோபோரோசிஸ் எலும்புகள் பலவீனமடையத் தொடங்கும் போது அந்த நிலை ஆஸ்டியோபோரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில், எலும்பு அடர்த்தி குறையத் தொடங்குகிறது, இது எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கிறது.
காபி குடிப்பது எலும்புகளில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. உங்கள் எலும்புகள் பலவீனமாக இருந்து, நீங்கள் காபி குடித்துக்கொண்டிருந்தால், அது உங்கள் எலும்புகளில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
கர்ப்பிணி பெண்கள் பெண்கள் கர்ப்ப காலத்தில் காபி குடிக்க கூடாது என மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது. மிறியும் குடிக்க ஆசைப்பட்டால் சிறிய அளவில் உட்கொள்ளலாம்.
ஆனால் இதை அதிகளவில் உட்கொள்ள கூடாது. ஒன்றுக்கு மேற்பட்ட முறை காபி குடிப்பது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லதல்ல. கர்ப்ப காலத்தில் அதிகமாக காபி குடிப்பதும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
![வெற்றியின் ரகசியம்: உங்க வயது முக்கியமல்ல... உங்க உளவியல் வயது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/0cff969b-8be0-4468-8b16-421f4aaa9ccd/25-67ac8e1dad626-md.webp)