நீரிழிவு நோயாளி சீரகம் அதிகமா சேர்த்துகிட்டா ஆபத்து! யார் யாரெல்லாம் தொடக் கூட கூடாது?
சீரகம், நம் உணவில் அதிகம் சேர்க்கப்படும் பொருள் ஆகும். இது பசி உணர்வை தூண்டுகிறது.
அதே நேரத்தில் இதை அதிகம் உணவில் சேர்ப்பதால், நமக்கு பாதிப்புகளும் அதிகம் இருக்கின்றன.
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல சீரகத்தையும் அளவாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சீரகத்தால் ஏற்படும் பக்கவிளைவுகள்
- சீரகத்தை அதிகம் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாக அமைந்து விடும்.
- சீரக விதைகளில் உள்ள அதிகப்படியான கார்மினேட்டிவ் விளைவு, ஏப்பங்களை அதிகளவில் ஏற்படுத்த காரணமாக அமைகின்றன.
- சீரக விதைகளை நாம் அதிகளவில் நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
- பெண்கள், தங்கள் கர்ப்ப காலத்தில் சீரகத்தை அதிகம் பயன்படுத்தி வந்தால், அது கருச்சிதைவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.
- சீரக விதைகளில் போதையுணர்வை ஏற்படுத்தும் பொருட்கள் இருப்பதால், இதை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவும்.
- சீரக விதைகளை அதிகம் நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் பட்சத்தில், மனப்பிறழ்வு, மயக்கம் மற்றும் குமட்டல் உணர்வுகள் ஏற்படும்.
- சீரகத்தை, அதிகளவில் நமது உணவில் சேர்த்துக் கொண்டால், நமது உடலில் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
நீரிழிவு நோயாளிகளே எச்சரிக்கை
நீரிழிவு நோயாளிகள், தங்களது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமானது ஆகும்.
இரத்ததத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்றத்தாழ்வுகள் நிலவினால், அது நீரிழிவு நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்துவிடும்.
நமது உணவில் சீரகம் அதிகரிக்கும் பட்சத்தில், அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென்று பாதியாக குறைத்துவிடும்.
இத்தகைய நீரிழிவு குறைபாடு கொண்டவர்கள், தங்களது உணவில் சீரகத்தை சேர்த்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.