ஆரோக்கியத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் சீஸ்... அதிகமாக சாப்பிடாதீங்க
பொதுவாகவே குழந்தைகளுக்கு சீஸ் உணவு மிகவும் பிடிக்கும். இன்றைய துரித உணவு கலாச்சாரத்தில், பீட்சா பர்கர் என அனைத்திலும் சீஸ் நிரம்பியுள்ளது.
ஆனால் இதனை அளவாக சாப்பிட்டால் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் அதிகமாக சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். மேலும் உடல் பருமன் இருப்பவர்கள் இதை தவிக்க வேண்டும்.
அதிகமாக சாப்பிட்டால் என்ன பிரச்சினை?
கலோரி மற்றும் கொழுப்பு சத்து அதிகம் கொண்ட சீஸை அதிகமாக சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கும். ஆனால் இவற்றில் கால்சியம் அதிகமாக இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.
இதில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் இதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பால் பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்துவதுடன், எளிதில் ஜீரணமாகாமல் வயிற்றுப்போக்கு வயிறு உப்புசம் பிரச்சினையை ஏற்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகள் சீஸை அளவோடு சாப்பிட வேண்டும். சீஸில் கால்சியம் புரதம், வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, ஜிங்க், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றது.
சீஸில் இருக்கும் ஈரப்பதத்தின் அடிப்படையில், ஹார்ட் சி சாப்ட் சீஸ் என இரு வகைகள் உள்ளது. இதில் சாஃப்ட் சீசில் கலோரிகள் குறைவு என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
எனவே, சீஸை சாப்பிடும் ஆசை உள்ளவர்கள் சாப்ட் சீஸ் வகையை தேர்ந்தெடுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |