அதிகமாக பாதாம் சாப்பிடுவது ஆபத்தா? இவ்வளவு தான் சாப்பிடனுமா
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பாதாம் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சற்று விலையுயர்ந்த பொருட்களில் ஒன்றாக காணப்படும் பாதாமை எந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது, இதனை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதாம் பருப்பை சரியான அளவில் உட்கொள்வதால், உடல் எடையை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை உடலுக்கு பல்வேறு ஆராக்கிய நன்மைகளை தருகின்றது.
தினசரி உணவுகளுடன் பாதாமையும்...
28 கிராம் பாதாம் பருப்பில் சுமார் 164 கலோரிகள் உள்ளன. எனவே தினசரி உணவுகளுடன் பாதாமையும் அதிகமாக உட்கொண்டால், அது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். எனவே, நாள் முழுவதும் 5 முதல் 6 பாதாம் பருப்புகளை மாத்திரம் உட்கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.
சிலருக்கு பாதாம் பருப்புகள் அல்லது மற்ற நட்ஸ் வகைகளை உட்கொள்வதால் ஒவ்வாமை ஏற்படுகின்றது.
ஒவ்வாமை உள்ளவர்கள் பாதாம் சாப்பிடுவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது. பாதாம் பருப்பை உட்கொள்வதால் சிலருக்கு ஓரல் அலர்ஜி ஏற்படுகின்றது. இதன் காரணமாக, உங்களுக்கு தொண்டை புண், உதடுகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படகூடும்.
பாதாமில் குடலில் கரையும் ஆக்சலேட் அதிகம் உள்ளது. உடலில் அதிகப்படியான ஆக்சலேட் இருந்தால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
எனவே, பாதாமை குறைந்த அளவில் உட்கொள்வது நன்மை பயக்கும். பாதாமில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்து ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆனால் அதிகப்படியான நார்ச்சத்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பாதாமை அதிகமாக உட்கொண்டால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, வயிற்று உப்புசம் மற்றும் வயிற்றுப் பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன. இதனால் பாதாமை அளவுடன் எடுத்துக்கொள்வதில் கவனம் தேவை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |