நடிகை சமந்தா நாகசைதன்யா விவாகரத்து விவகாரம்! சர்ச்சையான ட்வீட்டுக்கு சித்தார்த் கொடுத்த பதிலடி!
கடந்த நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா நாகசைதன்யா பிரிவதாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். அப்போது நடிகர் சித்தார்த் ட்விட்டரில் போட்ட ஒரு கமெண்ட் சர்ச்சையாகி வைரலாகியது.
தற்போது, சித்தார்த் அதற்கு விளக்கமளித்துள்ளார்., ஏற்கனவே சித்தார்த்துக்கு ஸ்ருதிஹாசன் உள்பட பல காதல்கள் இருந்தன. சமந்தாவுடனும் காதலித்தாகவும் அவை அதிக நாள் நீடிக்கவில்லை என கூறினார்கள்.
இந்நிலையில், சித்தார் போட்ட ட்விட்டில் பள்ளியில் ஒரு ஆசிரியரிடம் கற்றுக் கொண்ட முதல் படம், ஏமாற்றுகிறவர்கள் வெற்றி பெறுவதில்லை" என சித்தார்த் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார். சமந்தாவை குறி வைத்து சித்தார்த் இதனை எழுதியதாக அவர் மீது பலரும் குற்றம்சாட்டினர். கடுமையான விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் மகா சமுத்திரம் திரைப்படம் குறித்து தெலுங்கு மீடியாவுக்கு அளித்த பேட்டியில், தனது ட்வீட் குறித்து சித்தார்த் விளக்கமளித்துள்ளார். அதில், யாரையும் மனதில் வைத்து அந்த ட்வீட்டை போடவில்லை. பல வருடங்களுக்கு முன் என் ஆசிரியர் ஒருவர் சொல்லித் தந்ததை வைத்து அதனைப் போட்டேன். என்னுடைய மகா சமுத்திரம் படம் கூட அப்படியான ஒரு விஷயத்தைத்தான் கையாண்டிருக்கிறது.
யாருடைய பெயரையும் தேவையில்லாமல் இழுக்காதீர்கள். மேலும், என்னுடைய ட்வீட் தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை. சமூகவலைத்தளத்தில் வரும் யூகங்களுக்கு நான் பொறுப்பல்ல என கூறியுள்ளார்.
அத்துடன் அவர் நிறுத்தியிருக்கலாம். பின்னர், என்னுடைய வீட்டிற்கு வெளியே நாய்கள் இருக்கின்றன என்று சொன்னால், என்னைத்தான் அப்படிச் சொன்னார் என்று யாரும் புகார் சொல்லக் கூடாது என்று இன்னொரு உதாரணத்தையும் கூறியுள்ளார். விளக்கம் என்ற பெயரில் விவகாரத்தை பெரிதாக்கியிருக்கிறார் சித்தார்த்.....