சித்தார்த்-அதிதி ராவ்வின் திருமணம் எங்கே நடக்க போகுது தெரியுமா? வெளியான முழு விபரம்
நடிகர் சித்தார்த்-க்கும் நடிகை அதிதி-க்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.
தங்களுடைய நிச்சயதார்த்த மோதிரத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். ஆனால், இதுவரை திருமணம் எப்போது எங்கு நடக்கிறது என்பது குறித்து கூறவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் இருவரும் இணைந்து அளித்த பேட்டி ஒன்றில் அவர்களது திருமணம் எங்கு நடக்கப் போகிறது என்பது குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்கள்.
திருமணம் எங்கு?

நடிகை அதிதியின் பெற்றார் அந்த கால ஐதராபாத் மாநிலத்தின் பிரபு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. அவர்களது முன்னோர் வனர்பதி ராஜ வம்சத்தை சேர்ந்தவர்களாம்.

இதனால் சித்தார்த் - அதிதி திருமணம் அதிதியின் முன்னோர்களால் கட்டப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான வனர்பதி கோயிலில் தான் நடக்கும் என தெரிவித்துள்ளனர்.
சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருப்பது. அதேபோல் அதிதி ராவும் ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        