சித்தார்த்- அதிதி காதல்... ரியாக்ஷனில் கன்போர்ம் செய்த அதிதி ராவ்
சினிமாப் பிரபலங்கள் காதல் கிசு கிசுக்களில் சிக்குவது என்னவோ உண்மைதான். அதில் சமீப காலமாக சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் பரவி வந்தன.
இந்நிலையில் இதுதொடர்பாக அதிதி ராவ் மற்றும் சித்தார்த் ஆகியோர் எதுவித பதிலையும் தெரிவிக்காத வகையில், தற்போது இந்த சந்தேகங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு பதிலை கொடுத்திருக்கிறார் அதிதி.
image - the news international
அதாவது ஒரு நிகழ்ச்சியில் சித்தார்த்துடனான உறவு பற்றி அதிதியிடம் கேட்கப்பட்டபோது, அதிதி வெட்கப்பட்டதோடு, தனது வாயையும் மூடிக்கொள்ளும் வகையில் க்யூட்டான ஜாடை செய்துள்ளார்.
மௌனம் சம்மதத்துக்கான அறிகுறி என்று இதனால் புரிந்துகொள்ளப்படுகிறது. சித்தார்த், அதிதி இருவருமே கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த 'மகாசமுத்திரம்' திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள்.
இந்தத் திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் இருவருமே பல சினிமா நிகழ்ச்சிகளில் இருவரும் இணைந்தே காணப்பட்டார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் மகளின் திருமண நிச்சயதார்த்தம், பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சி என்பவற்றுக்கு இருவரும் இணைந்தே கலந்துகொள்கின்றனர்.
image - siasat.com
அதுமட்டுமில்லாமல் இருவரும் சேர்ந்து நடனமாடும் வீடியோக்களையும் பகிர்வது போன்றவற்றால் ரசிகர்கள் மிகவும் குழம்பிப் போயுள்ளனர்.
தற்போது இந்த குழப்பத்துக்கு எல்லாம் அதிதியின் க்யூட்டான ரியாக்ஷன் ஒரு பதிலைக் கொடுத்திருக்கும்.