விஜய்யை மோசமாக விமர்சித்த சத்யராஜ்! மகன் சிபிராஜ் கொடுத்த நெத்தியடி பதில் வைரல்
நடிகர் மற்றும் தவெக தலைவர் குறித்து நடிகர் சத்தியராஜ் பிரச்சாரத்தின் போது தாக்கியமைக்கு அவரது மகன் சிபிராஜ் தக்க பதில கொடுக்கும் வகையில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சத்தியராஜ் - சர்ச்சை பேச்சு
தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் தீவிரமாக எல்லா கட்சிகளும் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியிலும், தமிழ்நாட்டில் மற்ற தொகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றைய தினம் திமுக ஆதரவாக நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
முதலில் ஸ்டாலின் சார் என்றார்.அப்புறம் ஸ்டாலின் அங்கிள் என்று சொன்னார். எல்லோரையும் மரியாதையாகப் பேசும் விஜய் என்ன இப்படி பேசுகிறார் எனத் தோன்றியது. நாம பார்த்த விஜய் இப்படி இல்லையே..
தலைவா படம் வந்தபோது, கொடநாட்டுக்குப் போய் ஜெயலலிதாவை பார்த்தபோது, அம்மா அம்மா.. என்னை ரொம்ப மன்னிச்சுக்கங்கம்மா..என் தலைவா படத்தை எப்படியாச்சும் ரிலீஸ் பண்ணி விடுங்கம்மானு பேசுனாரு இல்லையா?
அப்படித்தான் மரியாதையாக பேசுவார் என்று பார்த்தால் ஸ்டாலின் அங்கிள் எனப் பேசிவிட்டார். இப்படி ஜெயலலிதாவை பேசி இருந்தால் கொத்து பரோட்டா போட்டிருப்பார்கள்.
அப்புறம் மேடையில் வந்து நான் ரெடி தான் என்றெல்லாம் பாடியிருக்க முடியாது. என மேடையில் விஜயை கடுமையாக தாக்கியிருந்தார்.

மகன் சிபிராஜ் பதிவு
இந்நிலையில் சத்யராஜின் மகன் சிபிராஜ் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் X தளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. அதில், "உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும்" என விஜய் சொன்ன வரிகளை சிபிராஜ் பகிர்ந்துள்ளார்.
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) April 18, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |