சுக்கிரன் கன்னி ராசியில் பெயர்ச்சி: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 3 ராசிகள் எவை?
ஜோதிட ரீதியில் ஆடம்பரம் மற்றும் காதலில் கிரகமாக அறியப்படும் சுக்கிரன் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
அந்தவகையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரனின் ஒவ்வொரு பெயர்ச்சியும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இருப்பினும் இந்த மாற்றம் சில ராசிகளுக்கு சற்று அதிகமான சாதகமான பலன்களை தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அப்படி சுக்கிரன் ஆசியால் அதிர்ஷ்ட பலன்களை அள்ளப்போகும் ராசிகள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் தானாகவே உருவாகும்.
குழந்தை பாக்கியம் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம். திருமண தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையும் வாய்ப்பு உள்ளது. பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவதற்கான பிராப்தம் காணப்படுகின்றது.
மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்த சிறிய பிரச்சனைகள் தீரும். தாமதமாக இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
மிதுனம்

மிதுன ராசியில் சுக்கிரன் 4-ம் வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நேர்மறையான மாற்றங்களும் ஏற்படும்.
தொழில் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்படும். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் அமையலாம்.
குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய வழிகளில் பெரியளவில் வருமானம் ஈட்டும் வழிகள் உருவாகும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 11-ம் வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி அடைவதால், வருமானம் மற்றும் செல்வம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கணிதம் மற்றும் அதனை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
வங்கி மற்றும் நிர்வாகம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். முன்கோபத்தை தவிர்த்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. நிதி நிலையில் சுக்கிரன் ஆசியால் ஏற்றம் உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |