இன்ஸ்டாகிராமில் கடைசியாக காணொளி வெளியிட்டு நெட்டிசன்களை கண்கலங்க வைத்த சண்முக பிரியா!
கணவரை இழந்த சீரியல் நடிகை சண்முக பிரியாவின் இன்ஸ்டா போஸ்ட் இணையவாசிகளை கண்கலங்க வைத்துள்ளது.
ஸ்ருதி சண்முகப்பிரியா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “நாதஸ்வரம்” என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.
இவர் கடந்த ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சீரியல் பிரபலமாக இருந்த சண்முக பிரியா வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சமூக வலைத்தளங்கள் பக்கம் கணவருடன் ஆக்டிவாக இருந்தார்.
இப்படியொரு நிலையில் மாரடைப்பு காரணமாக அவரின் கணவர் அரவிந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் காலமானார். இவரின் இறப்பை தொடர்ந்து அரவிந்த் பற்றி பல சர்ச்சையான கருத்துக்கள் எழுந்தன.
இருந்த போதிலும் சண்முக பிரியா சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
கடைசியாக வெளியிட்ட காணொளி
கணவர் விட்டு சென்ற பழக்கத்தை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் சண்முக ப்ரியா கணவர் இருக்கும் பொழுது எடுத்த வீடியோகாட்சியொன்றை பகிர்ந்துள்ளார்.
அதில்,“ அரவிந்த் இருக்கும் பொழுது இந்த பாடலை பாடி தான் நான் வழியனுப்புவேன்.. தினமும் இந்த வீடியோக்காட்சியை பார்த்து விடுவேன்.. தற்போது இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அத்துடன், “ கணவரின் நினைவுகளுடன் வாழும் வாழ்க்கை அழகானது..” என கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |