உறுப்பை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த ஸ்ருதிஹாசன்! கிண்டல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி
மூக்கை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக்கொண்டதாக நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
உடல் அழகு குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன், என்னுடைய மூக்கு உடைத்து, சற்று வித்தியாசமாக இருந்ததால், நான் எனது மூக்கை அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொண்டேன்.
எனது முகத்தை என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய உரிமை எனக்கு இருக்கிறது.
ஒவ்வொரு நபருக்கும், அவர்களது உடலில் மாற்றங்களை செய்யக் கூடிய உரிமை உள்ளது.

ஸ்ருதிஹாசன் அதிரடி பதில்
இதற்காக நான் அழகு கலை பொருட்களைப் படுத்துகிறேன் என்று அர்த்தம் கிடையாது.
நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அதை செய்யுங்கள். செய்ய விரும்பவில்லையா? அதனை செய்யாதீர்கள்.
அது உங்களுடைய விருப்பம். ஸ்ருதி ஹாசன் நடிகை போல இல்லை என்று முன்பு என்னை கிண்டல் செய்தார்கள்.
ஸ்ருதிஹாசன் நல்ல திறமை உள்ளவர் தான் ஆனால் அவர் இந்தியரை போன்று தோற்றம் அளிக்கவில்லை என்கிறார்கள். அதே நேரத்தில் நான் நடித்த பெரும்பாலான படங்களில், நான் கிராமத்து ஹீரோயின் கேரக்டரில் தான் நடித்து இருக்கிறேன்.
ஆக மொத்தம் நம்மை பற்றி ஏதாவது என்று பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் என்றார்