சினிமாவை விட்டு விலகும் மற்றுமொரு நடிகை! இது தான் காரணமாம்..
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் என்னால் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள முடியவில்லையென ஸ்ருதி ஹாசன் மனந்திறந்துள்ளார்.
சினிமா பயணம்
உலகநாயகன் கமல் ஹாசனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார். இவரின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தமிழும் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன நடித்து மக்கள் மத்தியில் பிரபமாகியுள்ளார்.
இதனை தொடர்ந்து சமிபக்காலமாக தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றுள்ளார்.
புதிய திரைப்படங்கள்
இந்நிலையில் சமிபத்தில் தெலுங்கில் முன்னணி நடிகர் சிரஞ்சீவியுடன் 'வால்டர் வீரய்யா', மற்றும் பாலா கிருஷ்ணாவின் 'வீர சிம்ம ரெட்டி' ஆகிய திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இரண்டு படங்களுக்கு ப்ரோமோஷன் நிகழ்வுகள் நடைப்பெற்றன. ஆனால் ஸ்ருதி ஹாசன், பாலா கிருஷ்ணாவின் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதனையடுத்து செய்த சிரஞ்சீவி பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து ஸ்ருதி ஹாசன் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தார்கள்.
ரசிகர்களுக்கான பதிவு
இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு ஸ்ருதி ஹாசன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
அதில், "எனக்கு உடல் நிலை சரியாக இல்லை. அதனால் தான் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை.
மேலும், எனக்கு மனரீதியாக சில பிரச்னைகள் இருக்கிறது. வீட்டிலோ அல்லது படப்பிடிப்பு தளத்திலோ நான் நினைத்த படி நடக்க வில்லை என்றால் மனவுளைச்சலுக்கு ஆளாகி விடுவேன், அதிக மனவுளைச்சல் அடைந்தால் அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்து கொள்வேன்" என்று பகிர்ந்துள்ளார்.
இவரின் இந்த பதிவு ரசிகர்களுக்கு மிகந்த வறுத்தத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.
மேலும் இவரின் நோய்களை குணமாக இறைவனை பிராத்திப்பதாக ரசிகர்கள் பகிர்ந்துள்ளார்கள்.