ப்ளாக் வாட்டர் குடிக்கும் ஸ்ருதி ஹாசன் - அப்படி என்ன உள்ளது இந்த நீரில் தெரியுமா?
கமல் ஹாசனின் மகளும், நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தமிழில் ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து 3, வீரம், லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ப்ளாக் வாட்டர் குடிக்கிறார். உடல் நல ஆரோக்கிய நன்மைக்காக அவர் குடிப்பதாக கூறப்படுகிறது.
எனவே, டோலிவுட் பாலிவுட் என பல பிரபலங்களும், இந்திய கிரிக்கெட் வீரர்களும் கறுப்பு நீரை குடிப்பதை கேள்விப்பட்டிருப்போம் அந்த வகையில் ஸ்ருதி ஹாசனும் இணைந்துள்ளார்.
காரணம் என்ன?
சமீப நாட்களாக குடிநீர் பற்றிய விழிப்புணர்வும் தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றியும் நியூட்ரீஷியன்களால் அதிகமாகப் பேசப்படுகிறது.
பல பிரபலங்களும், தங்களுடைய ஃபிட்னஸ் சீக்ரெட்டில் இந்த தண்ணீரும் மிக முக்கியப் பங்கு வகிப்பதாக ப்ளாக் வாட்டரை குடிக்கின்றனர்.
ப்ளாக் வாட்டர் நன்மைகள்
கறுப்பு ஆல்கலைன் தண்ணீர் சிறப்பு வாய்ந்தது. நம்முடைய உடலை அதிக நீரேற்றத்துடன் வைத்திருக்கக்கூடியது.
மேலும், இதில் பி.எச் அளவு மிக அதிகம். நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டது. சருமத்தைப் பாதுகாக்கக் கூடியது.
மனச்சோர்வை நீக்கும் தன்மை கொண்டது. இதுபோன்ற நிறைய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. நீண்ட நேரம் உடல் சுறுசுறுப்பாக இயங்க போதிய ஆற்றலை வழங்குகிறது.
ஏன் குடிக்க வேண்டும்?
உடலில் அமிலத் தன்மை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது. நிறைய மினரல்களும் பி.எச் அளவும் அதிகமாக இருப்பதால் உடலில் தேவையற்ற கழிவுகள் சேருவதைத் தடுக்கிறது.அதுமட்டுமின்றி, நம்முடைய உடல் மற்ற நுண்ணூட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கான ஆற்றலையும் இந்த ஆல்கலைன் தண்ணீர் கொடுக்கிறது.