பிக்பாஸில் கதறி அழுத சஞ்சீவ்! அக்கா மகளின் மிக உருக்கமான பதிவு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 81 நாட்களை கடந்து விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருக்கிறது.
இதில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக அமீர் மற்றும் சஞ்சீவ் நுழைந்துள்ளனர், இதில் சஞ்சீவ் பற்றி நாம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், மறைந்த நடிகை இவரது அக்கா சிந்துவிற்கு ஒரு மகள் இருப்பது சஞ்சீவ் சொல்லி தான் பலருக்கும் தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘அன்பறிவு’ படகுழு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தது. அப்போது, அப்படத்தின் இயக்குனர் அஸ்வின் தான் தன் அக்கா மகளின் கணவர் என்று சஞ்சீவ் கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சஞ்சீவ் தனது அக்கா சிந்துவை பற்றியும், அவரின் இறப்பு பற்றியும் மிகவும் உருக்கமாக பேசினார்.
அவரது அக்கா மகளை வளர்த்து கல்யாணம் செய்து கொடுத்ததுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
இவரின் உருக்கமாக பேசிய நிலையில், சஞ்சீவ் அக்கா சிந்துவின் மகள் ஸ்ரேயா, தனது இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அந்த பதிவில் - ‘என் வாழ்க்கையில் நடந்திருக்கும் மிகவும் சந்தோஷமான சிறப்பான தருணம் இது. இந்த நாளுக்காக தான் நான் 12 ஆண்டுகளுக்கு முன் கனவு கண்டுகொண்டிருந்தேன்.
நான் காதலிக்கிறேன் என்று என்னுடைய மாமா சஞ்சீவ்விற்கு தெரிந்த போது அவர் என்னை நம்பினார். அதே அளவு அஸ்வினும் பல கஷ்டங்களை கடந்து சாதிப்பார் என்று நம்பினார்.
என்னை பெற்றவர்களை விட அதிகமான பொறுப்பை அவர் ஏற்றுக் கொண்டார். எனவே, நானும் அஸ்வினும் அவரை பெருமை கொள்ளும் அளவுக்கு நடந்துகொள்வோம். எப்போதும் அவரை நாங்கள் தோய்ந்து போக விடமாட்டோம்.
இந்த படத்தின் டிரைலரை சஞ்சீவ் மாமா பார்க்க மாட்டார் என்று நான் கவலையாக இருந்த போது இது நடந்தது. இந்த உலகமே பார்க்கும் வகையில் அதுவும் ஒரு ஜாம்பவான் முன்பு இந்த படத்தின் ட்ரெய்லரை அவர் கண்டார்.
இதை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வருகிறது. இதை நான் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
என்னுடைய நண்பர்களும் குடும்பத்தினரும் யாரென்று தெரியாதவர்கள் கூட இந்த தருணத்தை மீண்டும் மீண்டும் பார்த்து பூரித்துப் போனதாக கூறினார்கள்.
அஸ்வின் நீ எங்களை மிகவும் பெருமையடைய செய்துவிட்டாய். என் மாமா மீது நான் அன்பு வைத்திருப்பது வேறு ஆனால், நீயும் அதே அளவு அன்பை அவர் மீது வைத்திருக்கிறாய். என்னுடைய கனவை நனவாக்கியதற்கு நன்றி, உங்கள் இருவருக்கும் நன்றி.
எப்போதெல்லாம் எனக்கு ஒரு சாதாரண குடும்பம் இல்லையே என்று நான் வருத்தப்பட்ட போது நீங்கள் இருவரும் அதை தவறு என்று உணர்த்தி இருக்கிறீர்கள்.
நீங்கள் இருக்கும் வரை இதுவரை நான் எனக்கு பெற்றோர்கள் இல்லையே என்று கவலைப்பட்டது இல்லை. என்னுடைய குடும்பமே எனக்கு பலம் இதைவிட வேறு சந்தோஷம் கிடையாது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.