முதன் முறையாக மகனின் கொள்ளை அழகு புகைப்படத்தை வெளியிட்ட பாடகி ஸ்ரேயா கோஷல்!
பிரபல முன்னணி பாடகியான இந்திய சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இம்ரான் ஹாஸ்மி, ஷங்கர் மகாதேவன், தேவி ஸ்ரீபிரசாத் ஹாரிஸ் ஜெயராஜ், டி,இமான் உள்ளிட்ட இசையமைப்பாளரின் இசையில் அதிகப் பாடல் பாடியுள்ளார் ஸ்ரேயா.
இவரின் குரலுக்காக மட்டுமல்லாமல் அவரது அழகுக்காகவும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் அவருக்கு உண்டு. மேலும், இந்தி தமிழ், மலையாளம் தெலுங்கு, கன்னடம் பெங்காலி, மராட்டி என பல மொழிகளில் பாட்களை பாடி மயக்க வைத்துள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டில் ஷிலாதித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
இதனிடையே, ஆறு மாதங்களாக குழந்தையின் முகத்தை காட்டாமல் வைத்திருந்த ஸ்ரேயா தற்போது, தனது மகனின் க்யூட் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு லைக்களை அள்ளி உள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தளங்களில் தீயாய் பரவ பலரும் என்ன அழகு என வர்ணித்து வருகின்றனர்.


