ஸ்ரேயா கோஷல் பற்றி பலரும் அறியாத உண்மைகள் என்னனு தெரியுமா?
மாய குரலழகி ஸ்ரேயா கோஷல் பற்றி பலரும் அறியப்டாத சில சுவாரஸ்சியமான தகவல்களை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்ரேயா கோஷல்
90ஸ் கிட்ஸ் ஆக இருந்தாலும் 2கே கிட்ஸ் ஆக இருந்தாலும் அனைவரும் ஸ்ரேயா கோஷலின் குரலுக்கு அடிமையாக காணப்படுகின்றனர்.
இவருக்கு 4 வயதிலேயே இசை ஆர்வம் இருந்திருக்கிறது. தனது 6ம் வயதில் முறைப்படி கிளசிக்கல் இசையை கற்க ஆரம்பித்துளாளார்.
பின்னர் மும்பையில் குடிபெயர்ந்த ஸ்ரேயா எனர்ஜி ஜீனியர் கல்லுரியில் சேர்ந்துள்ளார். இவருக்கு இசையில் ஆர்வம் இருந்ததால் இவர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கலை கல்லூரியில் சேர்ந்து அதை தொடர்ந்து சென்றுள்ளார்.
இவர் தனது 16ம் வயதில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சியில் பங்கு பற்றி டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார். 2002 ம் ஆண்டு வெளியான 'தேவதாஸ்' படத்தில் பாடகியாக அறிமுகமானார்.
இவர் முதல் பாடலுக்கே தேசிய விருதையும் பெற்றார். ஸ்ரேயா தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் பாடி தன் குரலால் அனைவரையும் கவர்ந்து வைத்துள்ளார்.
இவர் 5 படங்களுக்கு தேசிய விருதை பெற்றுள்ளார். இன்னும் பல விருதுகளை பெற்றுள்ளாார் ஸ்ரேயா.
மேலும் அமெரிக்காவில் ஒஹியோ மாகாண ஆளுனர் ஜீன் 26 ம் திகதி ஸ்ரேயா கோஷல் தினம் என அறிவித்துள்ளார். இவர் இசைக்கு கிடைத்த பொக்கிஷம் என அனைவராலும் போற்றபடுகிறார்.